
iOS, Android
Sellinam
திறன் கருவிகளுக்கான மிகவும் புகழ்பெற்ற உள்ளிடுமுறை செயலி.
முரசு அஞ்சல் 12
விண்டோசு, மெக் கணினிகளுக்கான விசைப்பலகைகள், உள்ளிடுமுறைகள், உயர்தர எழுத்துருக்கள் — 1985 முதல், தமிழின் அழகைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது.
அஞ்சல் குயில் எழுத்துருவில் எடை மாற்றம் — 400 முதல் 800 வரை. மேலுள்ள வரிகளின் மீது சுட்டியை நகர்த்திப் பாருங்கள்.
அஞ்சல் ஓர் அறிவார்ந்த உள்ளிடுமுறை. அதோடு, அழகான எழுத்துருக்கள் அடங்கிய தொகுப்பு, அகரமுதலி, வாசிப்புக் கருவி, எழுத்துப் பலகை முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் செயலிக்குள்ளேயே இவை அனைத்தும் இணைந்து இயங்கும்.
நீங்கள் எழுதும் முறையைக் கற்று, அடிக்கடி பயன்படுத்தும் சொற்களையும் தொடர்களையும் பரிந்துரைக்கும்.
மேம்படுத்தப்பட்ட அஞ்சல் எழுத்துருக்களுடன், நூல்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகளுக்கென வரையப்பட்ட புத்தம் புதிய வடிவமைப்பிலான எழுத்துருக்கள்.
அஞ்சல் கற்றுக்கொண்ட சொற்களைக் காணலாம், அவற்றை நிருவகிக்கலாம். மேலும் சொற்களை விரைவாகச் சேர்க்கலாம்.
நீங்கள் எழுதும் செயலியை விட்டு வெளியேறாமல் சொற்களின் பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட மூலங்களில் தேடலாம்.
உங்கள் கணினியில் எந்தச் செயலியில் இருந்தும் தமிழைச் சரியாக வாசித்துக் காட்டும்.
விசைப்பலகையில் இல்லாத தமிழ்க் குறியீடுகளையும் சின்னங்களையும் தேடிச் சேர்த்து, தனித் தொகுப்பாக வைத்துக்கொள்ளலாம்.
விண்டோசு, மெக் கணினிகளுக்கான தமிழ் தட்டெழுதும் முறை. விசைப்பலகை அமைப்புகளும் உள்ளிடுமுறைகளும் தமிழ் நம் எண்ணத்தில் இருப்பதற்கேற்ப அமைந்துள்ளன. திரையில் அழகாகத் தெரியும் எழுத்துகளாக மட்டுமல்லாமல் உண்மையான அன்றாடத் தேவைக்கென வரையப்பட்ட எழுத்துருத் தொகுப்பையும் கொண்டுள்ளது.
1985 முதல் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது — தமிழ் யுனிகோடுக்கு மாறிய காலத்தையும், நாற்பது ஆண்டுகால கணினியல் மாற்றங்களையும் கடந்து இயங்கும்படி தகவமைக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் எழுத்துருக்கள் நாங்களே வரைந்தெடுக்கிறோம். ஓர் உள்ளீட்டு மென்பொருளுக்கு இது வழக்கமானதல்ல; இந்தத் தளத்தின் முதன்மைத் தலைப்பில் நீங்கள் காணும் அதே எழுத்துரு செயலியிலும் வருகிறது என்பதற்கான காரணமும் இதுவே.