Blogs
இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
வலைப்பூவின் தலைப்பூ கொஞ்சம் அலட்டலாய் இருந்தாலும் அது உண்மைதான். கடந்த 20 ஆண்டுகளாய் நான் இணையத்தில் உலவினாலும், வலைப்பூக்கள் தோன்றியும் பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும், எனக்கென ஒரு வலைப்பூ வைத்துக் கொள்ளவேண்டுமென நான் முயற்சி எடுத்ததில்லை. ஆசை இருந்தது. புதிதாக வந்த பசங்களெல்லாம் வலைப்பூ வைத்துக் கொள்ளும்போது நாம் ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதைக் கருத்தரங்கம்
நெற்று (4 ஏப்ரில் 2009) கோலாலம்பூரில் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைக் கருத்தரங்கம் தொடங்கியது. இரவு உணவுக்குப் பின் 'இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு' என்ற தலைப்பில் நானும் 'இணையத்தில் தமிழும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் நண்பர் முனைவர் கண்ணனும் பேசினோம். அமர்வுக்கு நண்பர் இளந்தமிழ் தலைமை ஏற்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர்களோடு சேர்ந்து கலந்துரையாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
